எரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் கண்டுபிடிப்பு

எரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் கண்டுபிடிப்பு

எரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2018 | 4:26 pm

பத்து வருடங்களுக்கு முன்பு பூமியில் வீழ்ந்த எரி நட்சத்திரத்தில் வைரக்கற்கள் இருப்பதை சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு எரி நட்சத்திரம் வீழ்ந்தது. விண்வெளியில் நாசா அமைத்துக்கொண்டிருந்த ஆராய்ச்சி மையம் இதைக் கண்டுபிடித்தது.

ஆர்மஹாட்டா சிட்டா என அதற்கு பெயரிடப்பட்டது. ஆனால், அந்த நட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு சில கிலோமீட்டர் தூரத்தில் வெடித்துச் சிதறியது. பூமிக்குள் நுழைந்த அந்த நட்சத்திரம் சூடானில் உள்ள நுபியன் பாலைவனத்தில் பாதி எரிந்த நிலையில் வீழ்ந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதை சூடானில் இருக்கும் கார்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆல்மஹாட்டா சிட்டா நட்சத்திரத்தின் உடற்பகுதி முழுவதும் சிறு சிறு வைரக்கற்கள் இருந்தன.

இந்த எரி நட்சத்திரம் வெடித்தபோது வைரம் உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பே அதில் வைரம் இருந்திருக்கலாம். எனவே, இந்த எரி நட்சத்திரத்தில் வைரக்குவியல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அவை தூய்மையான வைரக்கற்கள் என்றும் அதற்கு முன்பு இதுபோன்ற வைரத்தை பார்த்ததில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம். மேலும், நட்சத்திரங்கள் மோதி சூரிய குடும்பம் உருவானபோது ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரமும் உருவாகி இருக்கலாம். பூமி உருவான அதே நாளில் இந்த எரி நட்சத்திரமும் தோன்றியிருக்கலாம்.

இதனை ஆய்வு செய்வதன் மூலம் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பதைக்கூட கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்