ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தாயார் காலமானார்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தாயார் காலமானார்

by Staff Writer 18-04-2018 | 10:58 AM
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் மனைவியும், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92 ஆவது வயதில் மகாலமாகியுள்ளார். அமெரிக்காவின் 41 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் 43 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பார்பரா புஷ் தனது 92 ஆவது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.