முத்துராஜவெல காணிகளை அரசுடமையாக்க திட்டம்

முத்துராஜவெல சரணாலயத்திற்கு சொந்தமில்லாத காணிகளை அரசுடமையாக்க திட்டம்

by Staff Writer 18-04-2018 | 10:22 AM
COLOMBO (News 1st) முத்துராஜவெல சரணாலயத்திற்கு சொந்தமில்லாத காணிகளை அரசுடமையாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த காணிகளின் எல்லைகள் தொடர்பில் குறித்த பிரதேச செயலாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, சில காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சிலரால் சுமார் 1000 ஏக்கர் நிலப்பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முத்துராஜவெல சரணாலய பகுதி ஏறக்குறைய ஐயாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பல்வேறு அரியவகை உயிரினங்கள் வாழும் இடமாக முத்துராஜவெல சரணாலயம் அறியப்படுகிறது.