இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் நாடு திரும்பியது

by Bella Dalima 18-04-2018 | 8:51 PM
Colombo (News 1st) பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை பட்மிண்டன் குழாம் இன்று நாடு திரும்பியது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்மிண்டன் போட்டிகளில் முதற்தடவையாக இலங்கை இம்முறை அரை இறுதி வரை முன்னேறியது. அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரில் நடைபெற்ற 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பட்மிண்டன் போட்டிகளில் இலங்கை சார்பாக 8 வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர். தினுக்க கருணாரத்ன ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி வரை முன்னேறியதுடன், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இரண்டு அணிகளுமே காலிறுதி வரை தகுதி பெற்றன. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பட்மிண்டன் போட்டிகளில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இலங்கையர் என்ற சிறப்பை சச்சின் டயஸ் - புவனேக குணதிலக்க ஜோடி பெற்றது.