தேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி: 15% வரி அறவீடு

தேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி: 15 வீத வரி அறவீடு

by Bella Dalima 18-04-2018 | 6:28 PM
Colombo (News 1st)  நாட்டின் தேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால் நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 9000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு 15,000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8000 கிலோகிராம் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவிற்கு தங்காபரண உற்பத்தி இடம்பெறவில்லை என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக இறக்கமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை அறவிடத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.