இங்கினியாகல விபத்து:ஒருவர் உயிரிழப்பு, 6பேர் காயம்

இங்கினியாகலயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்

by Staff Writer 18-04-2018 | 9:39 AM
COLOMBO (News 1st) பிபிலை அம்பாறை வீதியின் இங்கினியாகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். மோட்டார் வாகனமொன்று மண்மேடொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இங்கினியாகல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் இங்கினியாகல வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.