ரஷ்யாவில் Telegram messenger சேவைக்கு தடை

ரஷ்யாவில் Telegram messenger சேவைக்கு தடை

by Staff Writer 17-04-2018 | 9:36 AM
ரஷ்யாவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள பிரபல சமூக வலைத்தளமான Telegram messenger சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரச தொலைத்தொடர்பாடல் சேவை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த சேவையின் பாவனையாளர்களின் இரகசிய தொடர்பாடல் குறித்த தகவல்களை இந்த நிறுவனத்திடம் ரஷ்ய அரசு கோரியிருந்தது எனினும் இநத் தகவல்களை வழங்க குறித்த நிறுவனம் மறுத்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிற்குள் மாத்திரம் இந்த சேவை தடை செய்யப்பட்டுள்ளது. ரஷய் நாட்டு விதிமுறைகளை மிறிய குற்றச்சாட்டில் ரஷ்ய நீதிமன்றம் இதற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்புச் சேவை தீவிரவாத தாக்குதல்கள் சில தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக இந்த சேவையின் பாவனையாளர்களின் தொடர்பாடல் தகவல்கள் தொடர்பில் கேட்டுக்கொண்டது எனினனும் இது பாவனையாளர்களின் தனியுரிமையை பாதிக்கும் செயல் எனக்கருதி குறித்த சேவை இந்த தகவல்களை கொடுக்க மறுத்துள்ளது. ஆனால் இது 15 மில்லியன் பாவனையாளர்களின் சில நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமே தவிர தீவிரவாதத்தை மட்டுப்படுத்தாது என குறித்த சேவையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஏனைய சேவைகள் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளை தீவிரவாதிகள் மேற்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த சேவையை சர்வதேச ரீதியில் 200 மில்லியன பாவனையாளர் உபயோகிப்பதுடன் உலகின் 9 ஆவது பிரபல்ய தொடர்பாடல் சமூக வலைத்தளமாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.