விஜய் சேதுபதிக்கு சிறப்பு விருது

இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கு சிறப்பு விருது

by Staff Writer 17-04-2018 | 11:36 AM
COLOMBO (News 1st) லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம், துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறப்பு விருதை வென்றுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்து நடித்தார். பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார்.