சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமா?

by Staff Writer 16-04-2018 | 7:04 PM
COLOMBO (News 1st) எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு தாம் தயாராகி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் பின்னர், அது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கட்சி தலைவருக்கான பொறுப்புகளை உரிய வகையில் நிறைவேற்ற தவறியதாக, எதிர்கட்சித் தலைவர் மீது ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டின் ஒருசாரார் மீதான பிரச்சினைகளை மாத்திரம் முன்வைப்பது மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மாத்திரம் உள்ளடக்கி  நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஆகிய குற்றச்சாட்டுக்கள் எதிர்கட்சித் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (16) பொலன்னறுவையில் நடைபெற்ற தலைக்கு எண்ணை தேய்க்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவினர்.
கேள்வி - பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது விமர்சிக்கப்படுகின்றது? பதில் - மஹிந்த ராஜபக்ஸ தற்போது எதிர்கட்சித் தலைவர் ஒருவர் இல்லையல்லவா? இரு தரப்பினரும் இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்தின் மூலமே எதிர்கட்சித் தலைவர் மற்றும் அமைப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தற்போது உடன்படிக்கையொன்றையும் கைச்சாத்திட்டுள்ளார்கள் அல்லவா? தற்போது அவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகள் என்பது தௌிவாகின்றது. கேள்வி - அவ்வாறு என்றால் எதிர்கட்சித் தலைவரை நீக்குவதற்கு நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர எதிர்பார்கிறீர்களா? பதில் - அவ்வாறான ஒரு விடயத்தை நான் பத்திரிகையில் கண்டேன். ஊடகங்களில் பார்த்தேன். கேள்வி - நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுமா? பதில் - அதனை நான் ஊடகங்களில் பார்த்தேன். எனக்குத் தெரியாது. இன்னும் கலந்துரையாடவில்லை.
இதேவேளை திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவரிடம் ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவினர். https://www.youtube.com/watch?v=fkBez_FUiHY  

ஏனைய செய்திகள்