மீள்குடியேற்றப்பட்டு 10 வருடங்கள்: அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் வேதந்தீவு மக்கள்

மீள்குடியேற்றப்பட்டு 10 வருடங்கள்: அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் வேதந்தீவு மக்கள்

மீள்குடியேற்றப்பட்டு 10 வருடங்கள்: அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் வேதந்தீவு மக்கள்

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2018 | 8:04 pm

COLOMBO (News 1st) மீள்குடியேற்றம் செய்யப்பட்டு பத்து வருடங்களாகியும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர் திருகோணமலை – வேதந்தீவு மக்கள்.

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேதந்தீவு கிராமத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் 2008 ஆம் ஆண்டு மீண்டும் சொந்த நிலத்தில் குடியேறினர்.

வேதந்தீவு கிராமத்தில் சுமார் 90 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

இவ்வாறு மீள்குடியேறிய மக்கள் குடிநீர் , வீடு, மற்றும் வீதி போன்ற அடிப்படை பிரச்சினைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் வாழ்ந்துவருகின்றனர்.

இதனை விட யானைகளின் நடமாட்டத்தினால் பெரும் அச்சத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக இப்பகுதி மக்கள்கூறுகின்றனர்.

வேதந்தீவிலிருந்து – மூதூர் நகருக்கு செல்லும் தரைவழிப்பாதையில் களப்பு கடல் காணப்படுவதால் சுமார் 40 மீற்றர் தூரத்திற்கு இழுவைப்பாதை மூலம் பயணிக்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக இரவு நேரத்தில் அச்சத்துடன் பயணிப்பதாகவும், நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் கஷ்ட்டங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

வேதந்தீவு – மூதூர் தரைவழிப்பாதையிலுள்ள, களப்பு கடலுக்கு பாலம் அமைத்து தருமாறும் மக்கள் கோருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்