முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2018 | 3:52 pm

COLOMBO (News 1st)  முறையற்ற நிதி பயன்பாடு தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாமையினால், சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் சதொச நிறுவனத்தின் பணத்தினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, 39 மில்லியன் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து அதனை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பின்னர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர் வௌிநாடு செல்வதனை தடுக்கும் வகையில் உத்தரவிடப்பட்டதுடன் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமேகவின் வௌிநாட்டு கடவுச்சீட்டை கோட்டை மேல் நீதிமனறத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை

அதனால் முன்னாள் அமைச்சர் வௌிக்கடை சிறசை்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மனு மீதான விசாரணை மே மாதம் 11 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்