எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2018 | 4:01 pm

COLOMBO (News 1st) பண்டாரவளை எல்ல பகுதியில் காரொன்று விபத்திற்குள்ளானதில் 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கும்பல்வெல்ல – வெல்லவாய வீதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்,வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் 3 வயது குழந்தையும், குழந்தையின் தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குழந்தையின் தாய், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்