ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் 

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

by Bella Dalima 14-04-2018 | 7:00 PM
Colombo (News 1st)  புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று காலை 10.40 க்கு உதயமான சுப நேரத்தில் பால் பொங்கவைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தாண்டை வரவேற்றார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறவினர்களும் இணைந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்ல வளாகத்தில் ஜனாதிபதி மரக்கன்று ஒன்றையும் நாட்டினார். உதயமான புத்தாண்டில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க அமைச்சர்களும் பொதுமக்களும் இணைந்து கொண்டனர். அவர்களை ஜனாதிபதி வரவேற்று விருந்துபசாரம் வழங்கினார்.