இலங்கையர்களுக்கு ட்ரம்ப் புத்தாண்டு வாழ்த்து

இலங்கையர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

by Bella Dalima 14-04-2018 | 4:30 PM
Colombo (News 1st)  மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை வௌியிட்டுள்ளார். நல்லாட்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டில் மேலும் பலப்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.