65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் (Full List)

தேசிய திரைப்பட விருதுகள்: பாகுபலி-2 படத்திற்கு 3 பிரிவுகளில் தேசிய விருது (Full List)

by Bella Dalima 13-04-2018 | 5:52 PM
65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ் திரைப்படமாக டூ லெட் (To Let) தெரிவாகியுள்ளது. இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான தேசிய திரைப்படத் தெரிவுக் குழுவினர், செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தெரிவானவற்றின் பட்டியலை அவர்கள் அதன்போது வெளியிட்டுள்ளனர். சிறந்த படம்: Village Rockstars (இயக்குநர் - ரிமா தாஸ்) சிறந்த இயக்குநர்: ஜெயராஜ் (BHAYANAKAM) சிறந்த தமிழ் படம்: டூ லெட் (இயக்குநர் - செழியன்) சிறந்த நடிகை: ஸ்ரீதேவி (மாம்) சிறந்த நடிகர்: ரித்தி சென் (NAGARKIRTAN) சிறந்த துணை நடிகர்: ஃபஹத் ஃபாசில் (Thondimuthalum Driksakshiyum) சிறந்த துணை நடிகை: திவ்யா தத்தா (IRADA) சிறந்த ஒளிப்பதிவு: நிகில் எஸ். பிரவீன் (Bhayanakam Cameraman) சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை) சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர். ரஹ்மான் (மாம்) சிறந்த பாடலாசிரியர்: ஜே.எம். பிரஹலாத் (Muthuratna) சிறந்த பின்னணி பாடகர்: கே.ஜே. யேசுதாஸ் (Viswasapoorvam Mansoor - Poy Maranja Kalam) சிறந்த பின்னணி பாடகி: சாஷா திருபதி (காற்று வெளியிடை - வான் வருவான்) சிறந்த சண்டை வடிவமைப்பு: பாகுபலி 2 சிறந்த எடிட்டிங்: ரீமா தாஸ் (அஸ்ஸாமியப் படம்) சிறந்த ஒப்பனை: ராம் ராஜக் (Nagarkirtan) சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - பாகுபலி 2 தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படம் - Dhappa சிறந்த குழந்தைகள் திரைப்படம் - MHORKYA சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - IRADA சமூக பிரச்சினைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - AALORUKKAM சிறப்பு விருதுகள்: மராத்திப் படம் - Murakhiya; ஒடியா படம் : Hello RC; Take Off - மலையாளம்; பங்கஜ் திரிபாதி (நியூட்டன்); பார்வதி (மலையாளம்) அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: Sinjar (இயக்குநர் - பம்பள்ளி) சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: சந்தோஷ் ராமன் (Take Off) சிறந்த திரைக்கதை (அசல்): சஞ்சீவ் பழூர் (Thondimuthalum Driksakshiyum) சிறந்த திரைக்கதை (தழுவல்): ஜெயராஜ் (Bhayanakam) சிறந்த திரைப்பட எழுத்தாளர்: சம்பிட் மொஹந்தி (ஹலோ அர்ஸி) சிறந்த குழந்தை நட்சத்திரம்: பனிதா தாஸ் (Village Rockstars) சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (Toilet Ek Prem Katha - Gori Tu Latth Maar) சிறந்த சண்டைப்பயிற்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த பொழுதுபோக்கான திரைப்படம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் பாகுபலி-2 படம் விருதுகளை வென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.