இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

by Staff Writer 12-04-2018 | 7:02 AM
COLOMBO (News 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எச்.எம்.பி.ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார். 2150 பஸ்கள் இன்று முதல் மேலதிகமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 320 பஸ்கள் மேலதிகமான சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு இன்று முதல் 12 விசேட ரயில்சேவைகள் முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றிரவு 7.20 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை நோக்கி சொகுசு ரயில் பயணிக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இன்றிரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கும் பிற்பகல் ஒரு மணிக்கு கோட்டையிலிருந்து மஹவ நோக்கியும் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. காலியிலிருந்து மருதானை வரையில் பிற்பகல் 1.15 க்கு விசேட ரயில் பயணிக்கவுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.