நுரைச்சோலையில் பகுதியளவில் மின்உற்பத்தி ஸ்தம்பிதம்

நுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம்

by Staff Writer 12-04-2018 | 9:32 AM
COLOMBO (News1 st) திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் கட்டமைப்பை நேற்று நள்ளிரவு முதல் நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் உற்பத்தி நிலையத்தினால் சாம்பல் நிற பொருள் கடல் நீருடன் கலப்பதனால் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் நாளாந்தம் 900 மெகா வோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகிறது. இதன் முதலாம் கட்டமைப்பு செயலிழந்துள்ளமையினால், நாளாந்தம் 300 மெகாவோட் மின்சாரத்தை இழக்க வேண்டி ஏற்படுவதாக மின்சார பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மின் பிறப்பாக்கியின் போது நிலக்கரியை எரிப்பதற்காக பயன்படுத்தப்படும் எஞ்சினை குளிரூட்டுவதற்காக கடல் நீரை பெற்றுக் கொண்டு மீண்டும் அது கடலில் விடப்படுகிறது. 40 நாட்களாக இந்த நிலமை தொடர்வதாக மின்சார பொறியிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடல் நீர் அதிகளவில் மாசடைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.