அர்ஜுன், கசுன் பாலிசேனவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

by Bella Dalima 12-04-2018 | 5:08 PM
Colombo (News 1st)  பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, வழக்கின் நான்காவது சந்தேகநபரான கசுன் பாலிசேனவின் கையொப்பத்தை இரண்டு காசோலைகளுக்கு பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பான விசாரணை முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 26 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.