அமைச்சரவையில் தற்காலிக மாற்றம்

அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சுக்களுக்கு தற்காலிக அமைச்சர்கள் நியமனம்

by Bella Dalima 12-04-2018 | 6:06 PM
Colombo (News 1st)  முழுமையாக அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் வரை அமைச்சரவையில் தற்காலிக மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கலாநிதி சரத் அமுனுகம திறன் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இடர் முகாமைத்துவ அமைச்சராகவும் பைசர் முஸ்தபா விளையாட்டுத்துறை அமைச்சராகவும் மலிக் சமரவிக்ரம சமூக நலன்புரி, மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இந்த அமைச்சர்களுக்கு ஏற்கனவே தாம் வகிக்கும் அமைச்சுப்பதவிகளுக்கு மேலதிகமாகவே புதிய அமைச்சுப்பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.