உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #GoBackModi ஹேஷ்டேக்

உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #GoBackModi ஹேஷ்டேக்

உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #GoBackModi ஹேஷ்டேக்

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2018 | 7:20 pm

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் சென்றார்.

பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கைதாகினர்.

இதற்கிடையே, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்