MTV/MBC தலைமையகம் முன் அமைதியின்மை: IFJ கண்டனம்

MTV/MBC தலைமையகம் முன் அமைதியின்மை: சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கண்டனம்

by Bella Dalima 11-04-2018 | 8:16 PM
Colombo (News 1st)  MTV/MBC தலைமை அலுவலகத்திற்கு முன்பாக சிலர் அமைதியற்ற முறையில் செயற்பட்ட சம்பவத்தை IFJ எனப்படும் சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்து சில நிமிடங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கும் இந்த சம்மேளனம், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இதனுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.