ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை

ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை

ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

11 Apr, 2018 | 4:56 pm

ரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த படையினர் எழுவரும் கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளமையால், அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ளமையை மியன்மார் இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மியன்மாரில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் செரிந்து வாழும் ராக்கின் மாநிலத்தில் அந்நாட்டு அரசாங்கம் இன சுத்திகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் வன்முறைகளுக்கு முகங்கொடுத்த ரோஹிஞ்யா மக்கள் ஆயிரக்கணக்கில் பங்களாதேஷிற்கு இடம்பெயர்ந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்