கதிர்காம தேவஸ்தான பஸ்நாயக்க நிலமே பதவி நீக்கம்

கதிர்காம தேவஸ்தானத்தின் பஸ்நாயக்க நிலமே திரு. டி. பி. குமாரகே தற்காலிகமாக பதவி நீக்கம்

by Bella Dalima 10-04-2018 | 6:45 PM
Colombo (News 1st)  கதிர்காம தேவஸ்தானத்தின் பஸ்நாயக்க நிலமே திரு. டி. பி. குமாரகே தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக பௌத்த விவகார திணைக்களத்திற்கு கிடைத்த பல முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பஸ்நாயக்க நிலமே பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, பெளத்த விவகார ஆணையாளரால் இடைக்கால பஸ்நாயக்க நிலமே ஆக தில்ருவன் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.