மஹபொல நிதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஸ்தம்பிதம்

மஹபொல நிதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஸ்தம்பிதம்

by Staff Writer 10-04-2018 | 7:23 AM
COLOMBO (News 1st) பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் புலமைபரிசில் மற்றும் மஹபொல நிதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிப்பகிஷ்ரிப்பு இன்று 43 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டார். விடையத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தங்களின் கோரிக்கைகளுக்கு அவர் தீர்வு பெற்றுத்தருவதாக கூறிய போதிலும் சில அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எட்வட் மல்வத்தகே தெரிவித்தார். இதேவேளை இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர குறிப்பிட்டார். இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 150,000 அதிகமான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அருண குமார குறிப்பிட்டார். https://www.youtube.com/watch?v=G-GqKFOqa0k