த.தே.கூ எதிராக வாக்களித்தமையாலேயே பெறுபேறு மாறியது

பிரேரணையின் போது த.தே.கூ எதிராக வாக்களித்தமையாலே பெறுபேறு மாறியது: வாசுதேவ

by Bella Dalima 10-04-2018 | 7:40 PM
Colombo (News 1st)  நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தமையாலேயே பெறுபேறு மாறியதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நேற்று (09) நடைபெற்ற சோசலிச மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தெரிவித்ததாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடுநிலை வகிக்க இருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் சிலர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவும் பிரதமருக்கு எதிராகவும் வாக்களிக்கவிருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகவிருந்தது. நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என அனைவரும் எண்ணினார்கள். எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் நிலைப்பாட்டை மாற்றிய பின்னர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய சிறிய கட்சிகள், நடுநிலை வகிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தமையால், எமது திட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் பின்வாங்கினர். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் பின்வாங்கினர். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து அவர்களின் சமூகத்தவர்களை காட்டிக்கொடுத்துவிட்டனர். உண்மையில் கூறினால், பிரதமர் இதில் வெற்றிபெறவில்லை. அவரை காப்பாற்றிக்கொண்டார். விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமைக்கு இதுவே காரணம். இதனாலேயே பெறுபேறு முற்றாக மாறியது.

ஏனைய செய்திகள்