சிரிய அரசு மீது நடவடிக்கை எடுக்க  அதிகாரம் உண்டு

சிரிய அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகாரம் உண்டு என அமெரிக்கா தெரிவிப்பு

by Staff Writer 10-04-2018 | 8:51 AM
COLOMBO (News 1st)  ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி சிரிய அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகாரமுண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியா மீதான நச்சுவாயு தாக்குதல் குறித்து நேற்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ரஷ்யாவே ஆதரவு வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹெலி குற்றஞ்சுமத்தியுள்ளார். நச்சு வாயுத்தாக்குதலினால் கொல்லப்பட்ட சிறுவர்களின் நிழற்படங்களை கண்ணுற்றதாக கூறிய நிக்கி ஹெலி, இவ்வாறான கொலைச் சம்பங்களுக்கு சிரிய அரசுடன் ரஷ்யாவே கைக்கோர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் சிரியாவில் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான எவ்வித ஆதாரமும் இல்லையென ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் Sergei Lavrov தெரிவித்துள்ளார்.