முறிகள் மோசடி தொடர்பிலான மீள் பார்வை

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பிலான மீள் பார்வை

by Staff Writer 09-04-2018 | 8:26 PM
COLOMBO (News 1st)  முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து சட்டமா அதிபரினால் நடவடிக்கை எடுக்க முடியும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய வங்கியின் முறிகள் மோசடிகள் தொடர்பிலான மீள் பார்வை அடுத்து.... 2017.12.30 முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு மோசடியான முறையில் பணம் உழைத்தவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கையில் சிபாரிசு 2018 .01.23 அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு 2018.02.06 ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம். பெப்ரவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேலதிகமாக விவாதம் இடம்பெறும் என அறிவிப்பு 2018.02.20 தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை என்பதினால் தொடர்ந்தும் விவாதிக்க முடியாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பு மொழி பெயர்க்கும் வரை விவாதம் பிற்போடப்பட்டது. 2018.03.21 பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 14 குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுக்கள் முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையவை 2018.04.05 நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவு 2018.02.04 மத்திய வங்கியின் ஆளுநரின் முறைப்பாட்டிற்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பப்பர்ச்சுவல் ட்சரிஷ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கைது 2018.03.29 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரை கைது செய்வதற்கு பிடியானை சிவப்பு சமிஞ்சையும் கோரப்பட்டது. எனினும் ஜனாதிபதியின் அறிக்கை வௌியாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை!!!!!! https://www.youtube.com/watch?v=hGDx_Qu_d7c