அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

பிரதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

by Staff Writer 09-04-2018 | 8:03 PM
COLOMBO (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்று வருகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரையும் அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு இன்றைய கூட்டத்தின் போது கோரிக்கை விடுப்பதாக இராஜங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் இருவர் உட்பட 23 பேர் அன்றைய தினம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. பதவிகளை துறப்பதற்கு தயார் என, நம்பிக்ககையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் இன்று மீணடும் தெரிவித்தனர். இதே வேளை தேவை ஏற்படின் தனியாக அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஒன்றினைந்த எதிர் கட்சி காபந்து அரசாங்கம் ஒன்றிக்கு செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=wGFIfieGHFk

ஏனைய செய்திகள்