by Staff Writer 09-04-2018 | 8:49 PM
COLOMBO (News 1st)
வாசிப்பு ஒரு மனிதனை பூரணத்துவமாக்கும்......
எனினும் இதற்கான வசதி எத்தனைப் பேருக்கு கிடைக்கின்றதென்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
நுவரெலியா - சந்திரகாமம் யரவல் பிரிவில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வசித்து வருகின்றனர்
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் யரவல் தோட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு கல்வி இன்றியமையாததாக காணப்படுகின்றது.
மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்காக இதுவரை யரவல் தோட்டத்தில் நூலகம் அமைக்கப்படவில்லை.
இந்த குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் தோட்ட மக்களின் நிதி உதவியுடன் நூலகமொன்றை அமைப்பதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டாலும் போதியளவு நிதி இன்மையால் அந்த முயற்சி தடைப்பட்டுள்ளது.
சுமார் 35 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தலவாக்கலை, நாகசேனை போன்ற பகுதிகளிலுள்ள நூலகங்களுக்கு செல்லவேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நீண்ட தூரம் பிரயாணித்து நூலகம் செல்வதனை தவிர்க்கும் பிரதேச இளைஞர்கள், தேவையற்ற வகையில் பொழுதுபோக்கை கழிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாரிய அபிவிருத்தித் திட்டங்களை காணும் நாட்டில் இன்னமும் நூலக வசதிகள் கூட இல்லாத கிராமங்களும் காணப்படுகின்றமை கவலைக்குரியதே!!!!
இவர்களது கோரிக்கைக்கு செவிசாய்த்து இனியேனும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
https://www.youtube.com/watch?v=k4GdpTSt798