by Staff Writer 09-04-2018 | 6:17 PM
COLOMBO (News 1st) கண்டி, பன்வில பகுதியில் நக்கிள்ஸ் வனப்பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்த 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று மாலை பம்பரெல்ல பகுதியில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் கையடக்க தொலைபேசிகள் இயங்காமையினால் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஆறாம் திகதி நக்கிள்ஸ் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்கள் காணாமல் போனதாக இன்று காலை தமக்கு தகவல் கிடைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணமற் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
https://www.youtube.com/watch?v=KDANMQ6qGLE