ஐ.தே.க மறுசீரமைப்பு தொடர்பில் விமர்சனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சிக்குள்ளேயே விமர்சனம்

by Staff Writer 09-04-2018 | 8:13 PM
COLOMBO (News 1st)  தனியாக ஆட்சியமைப்பது தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் கருத்து வௌயிட்டிருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சிக்கு உள்ளேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை நாள் பூராகவும் அலரி மாளிகையில் ஒன்று கூடி கலந்துரையாடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு இறுதியில் 12 பேர் அடங்கிய அரசியல் குழு ஒன்றை நியமித்தது. இந்த குழு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு நபர்களை நியமிக்கவுள்ளதாக பின்னர் அறிவித்தது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வெற்றிடம் நிலவுவதுடன் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவும் தனது பதவியில் இருந்து இராஜினமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=I8uo4De59aY