அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறினால் அமெரிக்கா எதிர்காலத்தில் வருத்தப்பட நேரிடும் - ஈரான்

by Staff Writer 09-04-2018 | 5:26 PM
COLOMBO (News 1st) அணுசக்தி ஒப்பந்தத்தை மீறினால் அமெரிக்கா எதிர்காலத்தில் வருத்தப்பட நேரிடுமென ஈரான் எச்சரித்துள்ளது. இவ்வாறு இடம்பெற்றாலும் ஒரு வாரத்திற்குள் ஈரான் பதிலளிக்கும் என ஈரான் ஜனாதிபதி Hassan Rouhani தெரிவித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை தாம் மீறமாட்டோம் எனவும், அமெரிக்கா மீறினால் வருந்தத்தக்க பதில் வழங்கப்படும் என்பதை அறிந்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பிலான நடைமுறைகள் எதிர்வரும் மே மாதம் 12 ம் திகதிக்குள் கடுமையாக்கப்படாவிட்டால், புதிய தடைகள் விதிக்கப்படுவதுடன் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.