யாழ்.தேவிரயிலில் கெப்வண்டி மோதியதில் இருவர் காயம்

யாழ்.தேவி ரயிலில் கெப் வண்டி மோதியதில் இருவர் காயம்

by Staff Writer 08-04-2018 | 4:34 PM
COLOMBO (News 1st) - வட மாகாணத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினால் ஏற்படும் விபத்துக்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. யாழ். தவசிக்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதியை கடக்க முற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கெப் வாகனம், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலுடன் மோதியது. கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இன்று காலை 10.35 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ரயில் மின்விளக்கு மற்றும் ஒளி சமிஞ்சை இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கெப் வாகனம் ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை என்ற பதாகை காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் முதலில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் இருந்து யாழ். போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் வைத்தியசாலையை விட்டு வௌியேறிய நிலையில் மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார். சாவகச்சேரி - வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் தெரிவித்தார் சமப்வம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.youtube.com/watch?v=Sm_8npiM8TI