மீள்பரிசீலனைக்கான கால அவகாசம் நீடிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனைக்கான கால அவகாசம் நீடிப்பு

by Staff Writer 08-04-2018 | 5:01 PM
COLOMBO (News 1st) - 2017 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனைக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், பாடசாலை விண்ணப்பதாரிகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளுக்கு இம்மாதம் 12 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தில் நிலவும் தொழினுட்ப கோளாறு காரணமாக தபால் மாஅதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையில் 688,573 பேர் தோற்றியிருந்த போதிலும் அனைத்து பாடங்களிலும் 9960 மாணவர்கள் ஏ சித்தியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.