கண்டி சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

கண்டி சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

by Staff Writer 08-04-2018 | 7:10 PM
COLOMBO (News 1st) - கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 1996 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுச் சட்டத்தின் அதிகாரத்திற்கமைய, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட மற்றும் இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரிடம் இருந்து தகவல்களையும், சாட்சியங்களையும் எழுத்து மூலம் திரட்டப்படவுள்ளது. புகைப்படங்கள், காணொளிகள் அல்லது குரல் பதிவுகளையும் சமர்ப்பிக்க முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எழுத்து மூலமானஆவணங்களை, எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கண்டி அலுவலகத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. பிரதேச ஒருங்கிணைப்பாளர், கண்டி பிராந்திய காரியாலயம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 8/1. பிறிம்ரோஸ் வீதி, பேராதனை, கண்டி எனும் முகவரிக்கு அவற்றை அனுப்பி வைக்க முடியும். மேலதிக தகவல்களுக்காக, 081 22 28 009 அல்லது 070 36 54 901 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=XbhYIosRSfU