Colombo (News 1st)
21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் அவுஸ்திரேலியா 17 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 50 பதக்கங்களைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அவுஸ்திரேலிய Gold Coast-இல் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இன்று மூன்றாம் நாள் போட்டிகள் இடம்பெறுகின்றன.
இங்கிலாந்து 14 தங்கம், 11 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 29 பதக்கங்கள் பெற்று 2 ஆவது இடத்திலுள்ளது.
ஒரு வௌ்ளி, இரண்டு வெண்கலப்பதக்கங்களுடன் இலங்கை, பதக்கப்பட்டியலில் 12 ஆவது இடத்திலுள்ளது.
