கொழும்பிலிருந்து சுற்றுலா சென்ற நால்வர் உளுகங்க ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
by Bella Dalima 07-04-2018 | 8:47 PM
Colombo (News 1st)
கண்டி - பன்வில, உளுகங்க ஆற்றில் மூழ்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் மேலும் ஒருவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொழும்பிலிருந்து சுற்றுலா சென்றவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
மூன்று பெண்கள் அடங்கலாக நான்கு பேர் உளுகங்க ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
காணாமற்போயுள்ளவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.