by Bella Dalima 07-04-2018 | 6:40 PM
கனடாவின் இளையோர் பனி ஹாக்கி அணி பயணித்த பேருந்து, லொறி ஒன்றுடன் மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சஸ்காட்சவான் மாகாணத்தில் டிஸ்டாலின் வடக்கில், நெடுஞ்சாலை 35 இல் "ஹம்போல்ட் ப்ரோன்கோஸ்" ஹாக்கி அணியினர் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளதுடன், ஓட்டுநர் உள்ளிட்ட 14 பேர் விபத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய 28 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சஸ்காட்சவான் மாகாணத்தின் இளையோர் ஹாக்கி போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் நிபாவின் ஹௌக்ஸ் அணியோடு மோதுவதற்காக ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் அணியினர் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் 16 முதல் 21 வரை வயதுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது.