by Bella Dalima 07-04-2018 | 4:10 PM
Colombo (News 1st)
பாதாளக்குழுத் தலைவரான மாகதுரே மதுஷ் மற்றும் அங்கொட லொக்காவின் நண்பர்கள் நால்வர் மிரிஹான விசேட விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.