by Bella Dalima 07-04-2018 | 3:48 PM
Colombo (News 1st)
கொழும்பில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நடவடிக்கை மேலும் நான்கு மாதங்களுக்கு தாமதமாகியுள்ளது.
தாமரைக் கோபுரத்தில் மேற்கொள்ளப்படும் சில முன்னாய்வுப் பணிகள் இதுவரையில் நிறைவு செய்யப்படாமையால், அதனைத் திறந்து வைப்பதில் தாமதம் நிலவுவதாக தாமரைக் கோபுர செயற்றிட்டத்தின் ஆலோசனைக்குழுத் தலைவரும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வாஸ்த்து சாஸ்த்திரம் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியருமான சமித்த மானவடு தெரிவித்தார்.
மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் நிறைவடையும் என அறிவித்த போதிலும், தாமரைக் கோபுரத்திற்கான உட்கட்டுமான செயற்பாடுகளின் உறுதித்தன்மை குறித்து ஆராய்வதற்கு சுமார் மூன்று மாதங்கள் தேவைப்படும் என அவர் கூறினார்.
இதேவேளை, கோபுரத்திற்கு தேவையான சில பொருட்களை கொள்வனவு செய்வதிலும் தாமதம் நிலவுவதாக பேராசிரியர் சமித்த மானவடு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டாலும் தாமரைக் கோபுரத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதில் தாமதம் நிலவும் என அவர் சுட்டிக்காட்டினார்.