ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் தலைமைத்துவக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் தலைமைத்துவக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் தலைமைத்துவக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2018 | 7:30 pm

Colombo (News 1st) 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் தலைமைத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்கு இன்று கூடிய கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அந்த குழுவில் 12 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் எனவும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் ஏனைய பதவிகளை அதே முறையில் முன்னெடுப்பதற்கும், பொதுச்செயலாளர், தேசிய அமைப்பாளர் மற்றும் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நியமனங்களை வழங்குவது தொடர்பில் இன்று பெயரிடப்பட்ட தலைமைத்துவக்குழு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானமொன்றை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்