பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வௌ்ளி

21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதல் வௌ்ளிப்பதக்கம்

by Bella Dalima 06-04-2018 | 3:46 PM
Colombo (News 1st)  21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை முதல் வௌ்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளது. ஆடவருக்கான பளுதூக்கலில் இந்திக்க திசாநாயக்க வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 69 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட அவர், ஸ்னெட்ச் முறையில் 137 கிலோகிராமை தூக்கினார். க்ளீன் அன்ட் ஜேக் முறையில் 160 கிலோகிராமை தூக்கினார். மொத்தமாக 297 கிலோகிராம் எடையைத் தூக்கினார். இந்த போட்டியில், வேல்ஸின் எவன்ட்ஸ் க்ரெத் தங்கப்பதக்கத்தை வென்றார். குத்துச்சண்டை கோதாவில் ஆடவருக்கான 46 - 49 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கையின் திவங்க ரணசிங்க காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார். சிறந்த 16 பேர் சுற்றில் அவர் தென் ஆப்பிரிக்காவின் சியபுளேலா பொன்கொஷியை 4 - 0 என வென்றார். ஆடவருக்கான 100 மீற்றர் அஞ்சல் பிரிவு ப்ரீஸ்டைல் நீச்சலில் இலங்கை குழாம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.