பிரதமர் ரணில் மிஸ்டர் கிளீனா?

பிரதமர் ரணில் மிஸ்டர் கிளீனா?

by Bella Dalima 06-04-2018 | 8:29 PM
நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டீர்களா?
  • நிதி அமைச்சின் கீழ் இருந்த மத்திய வங்கியை தமது அமைச்சின் கீழ் கொண்டு வந்தமை
  • அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பெற்ற சில தினங்களுக்குள் சிங்கப்பூர் பிரஜையான தனது நண்பர் அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுனர் பதவியில் நியமித்தமை
  • நியமனம் வழங்கி சில வாரங்களுக்குள் முறிகள் மோசடியில் ஈடுபட்டமை
  • மோசடி இடம்பெற்ற முறிகள் கொடுக்கல் வாங்கலின் போது, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்டதாக டியூ.குணசேகர தலைமை வகித்த கோப் குழுவில் அர்ஜூன மகேந்திரன் தெரிவித்தமை
  • முறிகள் மோசடியின் ஊடாக அப்போது 688 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டமை
  • கணக்காய்வாளர் நாயகத்திற்கு அமைய, 30 வருடங்களில் இந்த நட்டம் பில்லியன்களைத் தாண்டும் என கூறப்பட்டமை
  • குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, தண்டனை விதிக்கவும் இந்த நட்டத்தை இருமடங்காக வசூலிக்குமாறும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்தமை
  • குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு அமைய அர்ஜூன மகேந்திரனை பிரதான சந்தேகநபராகக் குறிப்பிட்டு, சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்குமாறு கோரப்பட்டமை
  • மகேந்திரனின் மருமகன் மற்றும் அவருடைய நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தற்போதைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை
  • பாராளுமன்றத்திலும் பல்வேறு குழுக்களை நியமித்து அதனூடாக அர்ஜூன மகேந்திரனை பாதுகாத்து முறிகள் மோசடியை மறைக்க முயன்றமை
  • 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இரகசியமாக பல்வேறு சரத்துக்களை உள்ளடக்கி ஊடகங்களை ஒடுக்க முயன்றமை
  • தேசிய கணக்காய்வு சட்டத்தை தாமதப்படுத்தி, அரச நிதி கட்டமைப்பு உருவாக்கப்படுவதனை தொடர்ச்சியாக தாமதிக்க செய்தமை
  • அந்நிய செலாவணி சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, பல்வேறு சூழ்ச்சிகளின் ஊடாக அதனை நிறைவேற்றியதன் மூலம், அந்நிய செலாவணி சட்டத்தை தளர்த்தியமை
  • ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு நண்பர்களை நியமித்து, தேசிய விமான சேவையின் நட்டத்தை நாளாந்தம் அதிகரித்தமை
  • நிறுவனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய பின்னர் நெருங்கிய நண்பர்களை நீக்கி, வேறு நபர்களை நியமித்து மக்களின் நிதியை வீண்விரயமாக்கியவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டமை
ஒன்றல்ல இரண்டல்ல... கடந்த மூன்று வருடங்களில் செய்த மேலும் பல விடயங்களை அம்பலப்படுத்த முடியும். அரசியல் ஒப்பந்தங்களின் ஊடாக மக்களின் கருத்தை புறந்தள்ளி நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டாலும் தொடர்ந்தும் நீங்கள் மிஸ்டர் கிளீனா?