வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார் கருணாஸ்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார் கருணாஸ்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார் கருணாஸ்

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2018 | 9:27 pm

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்தார்.

தமிழக சட்டமன்ற உறுப்பினரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ் என்றழைக்கப்படும் கருணாநிதி சேது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பை அடுத்து, இலங்கை அகதி மாணவர்களுக்கு தனியார் கல்லூரி ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பதே தமது நீண்ட நாள் ஆசை என கருணாஸ் தெரிவித்தார்.

இலங்கை அகதி மாணவர்களுக்கான தனியார் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வட மாகாண முதல்வரை அழைக்கவே தாம் இலங்கை வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழர் பிரச்சினைகளின் போது வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் அறிக்கை விடுக்கின்றமை தமக்கு ஆறுதலளிப்பதாகவும் கருணாஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கிளிநொச்சியில் 413 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தமிழக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் இன்று சந்தித்தார்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்