பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பிரசாந்த்

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பிரசாந்த்

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பிரசாந்த்

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2018 | 6:21 pm

ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வரும் நடிகர் பிரசாந்த், இந்த வருடம் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார்.

தற்போது ‘ஜானி’ என்ற படத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகிறார்.

மேலும் பிரபு, ஆனந்த ராஜ், அஸ்தோ ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷி, ஜெயக்குமார், கலைராணி, சங்கர், சுரேஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

வெற்றி செல்வன் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

நடிகர் பிரசாந்த்துக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி (இன்று) பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும், தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடுவார். ஆனால், இந்த வருடம் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை திருப்பி அனுப்பி விட்டார்.

தமிழ்நாடு முழுவதும் காவிரிப் பிரச்சினைக்காக விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டம் முக்கியம் இல்லை என கூறி ரசிகர்களை அனுப்பியிருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்