பிரேரணை தோற்கடிக்கப்படுமென எதிர்வுகூறிய தமிழ் தந்தி

பிரேரணை தோற்கடிக்கப்படுமென எதிர்வுகூறிய தமிழ் தந்தி

பிரேரணை தோற்கடிக்கப்படுமென எதிர்வுகூறிய தமிழ் தந்தி

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2018 | 8:48 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும்
என கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெளிவந்த தமிழ் தந்தி வாராந்த பத்திரிகையில் எதிர்வுகூறப்பட்டிருந்தது.

மஹிந்த – மைத்திரி – ரணில் இணைந்து தோற்கடிக்கும் பிரேரணை என்ற தலைப்பில் தமிழ் தந்தி பத்திரிகை இந்த செய்தியை கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பிரசுரித்திருந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்கவை தக்கவைத்துக்கொள்வதன் ஊடாக தற்போதைய அரசாங்கத்தை தக்கவைப்பதற்கு தனது தீவிர அக்கறையைக் காட்டிவருவதாகவும் தமிழ் தந்தி வாராந்த பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்