நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது

நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது

நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2018 | 4:12 pm

Colombo (News 1st)

யாழ். நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இன்று முற்பகல் நடைபெற்ற திறந்த வாக்கெடுப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட பிலிப் ஃபெட்ரிக் ரொஷான் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாக்கெடுப்பில் பிலிப் பெட்ரிக் ரொஷானுக்கு 7 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழுவை சேர்ந்த இருவரும் பிலிப் ஃபெட்ரிக் ரொஷானுக்கு ஆதரவளித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட நல்லதம்பி சசிகுமார் 6 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ச. லோகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்