உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியமுள்ளது: ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியமுள்ளது: ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியமுள்ளது: ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2018 | 3:31 pm

Colombo (News 1st) 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய அவசியமுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தில் மக்கள் ஆணையை பிரதிபலிக்க முடியாமற்போயுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் ஊடாக சிறந்த பெறுபேறுகள் கிடைக்காது என அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாகக் குறைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்