MTV/MBC  அருகில் குழப்பம்:ஊடகக்கூட்டமைப்பு கண்டனம்

MTV/MBC தலைமையகம் அருகில் இடம்பெற்ற சம்பவத்திற்கு ஊடகக் கூட்டமைப்பு கண்டன அறிக்கை

by Bella Dalima 05-04-2018 | 3:25 PM
Colombo (News 1st)  MTV/MBC ஊடக வலையமைப்பின் தலைமையகத்திற்கு அருகில் நேற்றிரவு (04) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உலகின் மிகப்பெரிய ஊடக அமைப்பான ஊடகக் கூட்டமைப்பு கண்டன அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான தகவல் தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஊடகக் கூட்டமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி Sally-Ann Wilson விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. MTV/MBC ஊடக வலையமைப்பு, ஊடகக் கூட்டமைப்பின் நீண்ட கால உறுப்பினர் எனவும் சர்வதேச நற்பெயரை வென்ற நிறுவனமொன்றுக்கு முன்பாக இத்தகைய சம்பவம் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்கள் குறித்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக Sally-Ann Wilson வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.