புதிய அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்

பிரதமருக்கு எதிராக வாக்களித்தவர்களை அமைச்சரவையில் இருப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை - ராஜித சேனாரத்ன

by Staff Writer 05-04-2018 | 7:41 AM
COLOMBO (News 1st) - எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்க முடியாது எனவும் பிரதமருக்கு எதிராக வாக்களித்தவர்களை அமைச்சரவையில் இருப்பதற்கு  இடமளிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுங் கட்சியினர் வெற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்ற சபையிலிருந்து வெளியேறிய போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்....
கேள்வி - எனினும், அமைச்சரவையில் இருப்பது எமது ஜனாதிபதி. ஆகவே நாங்கள் தொடர்ந்தும் செயலாற்றவுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனரே பதில் - இல்லை. இல்லை. ஜனாதிபதியை கொண்டு வந்தது நாங்கள். அவர்கள் அல்ல. நாங்களே ஜனாதிபதியை கொண்டு வந்தோம். ஆகவே அதற்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை. புதிய அமைச்சரவை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதியும் கூறியுள்ளார். https://www.facebook.com/265986223570334/videos/940711266097823/